காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம்
காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
வைணவ திருக்கோவில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் விமர்சையாக நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடந்த வைபவத்தில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கால சந்தி பூஜை முடிந்து உற்சவமூர்த்தி சக்கரத்தாழ்வார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து அலங்காரம் திருவாராதனம், மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஸ்தளத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லாான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள் திருவேங்கடம் சுரேஷ் நாராயணன் செளந்தரராஜன் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.