உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொடர் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பழநி; பழநி முருகன் கோயிலில் மொகரம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் அதிக கூட்டம் இருந்தது.

பழநி முருகன் கோயிலுக்கு மொகரம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை துவக்க நாளான ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர். பழநி கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப்கார், வின்ச் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். பழநி கோயிலுக்கு செல்ல படிப்பாதையில் காலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமானது. உடனடியாக கோயில் நிர்வாகம் குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்களை அனுமதித்தது. கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். வெளிபிரகாரத்தில் மருத்துவ வசதி, தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. கட்டண தரிசன வழியில் வெயிலின் தாக்கத்தால் பெண்கள் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சோர்ந்து மயங்கினர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் தரிசன வரிசை பகுதியில் நிழல் பந்தல்களை அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !