உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி அனுஷம்; காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி அனுஷம்; காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா பெரியவர் திரு உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் பால் பழம், பன்னீர், தயிர், சந்தனம், உலர் பழங்கள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரை தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !