உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ ; பூஜை செய்து வழிபட்ட மக்கள்

வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ ; பூஜை செய்து வழிபட்ட மக்கள்

கூடலுார்; ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் வீட்டில் பூத்ததால் மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.


கூடலுார் ஆங்கூர்பாளையம் ரோட்டில் வசிக்கும் மல்லிகா என்பவரது வீட்டில் ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தது. இதனைக் காண அப்பகுதி மக்கள் திரண்டனர். செடிக்கு முன்பு மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆண்டிற்கு ஒரு முறை நள்ளிரவில் மலர்ந்து அதிகாலையில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டது. இது இமயமலையில் வளரும் அரிய வகை மலராகும். குடியிருப்புகளில் மிகக் குறைந்த அளவே பூக்கும். படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. அரிய வகை பூ என அழைக்கப்படும் பிரம்ம கமலம் பூத்திருப்பதை அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் சென்று வழிபட்டனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !