உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையடுத்து ஜூன் 29 முதல் 4 கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹாபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், வீதி உலா நடந்தது. ஆலய நிர்வாக குழு தலைவர் காங்., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், வாலியா குழும நிர்வாக இயக்குனர்கள் தேவகுரு போஸ், திருமூலர், நிர்வாக குழு உறுப்பினர்கள் அரவிந்த் குமார், பழனிக் குமார், முன்னாள் கவுன்சிலர் போஸ், ராஜசேகரன், குமாரவேல், ராகுல் ஸ்ரீகாந்த், ராணா சக்தின் கிரிஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். வழக்கறிஞர் ரவிச்சந்திர ராம வன்னி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் காமராஜ், கவுன்சிலர்கள் ஜோதிமணி, கோபி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !