எர்ரம்பட்டியில் 21 பரிவார தெய்வ கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4 hours ago
வாடிப்பட்டி: எர்ரம்பட்டியில் அழகர் மலையான், ராக்காயி அம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, சின்னம்மாள், நாகம்மாள் மற்றும் 21 பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை.,1ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 4ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து புனித நீர் தீர்த்த குடங்கள் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அழகுமலையான் கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.