புதுக்கோட்டை பாதகருப்பு கோவில் புரவிஎடுப்பு திருவிழா
ADDED :1 days ago
நத்தம், நத்தம் அருகே புதுக்கோட்டை முத்தாலம்மன் மற்றும் பாதகருப்பு சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் வத்திபட்டியில் செய்யப்பட்ட சுவாமி மற்றும் குதிரை சிலைகள் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு பாதக்கருப்பு சுவாமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து இரவு முத்தாலம்மன் பூந்தேரில் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, முளைப்பாரி கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.