குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED :18 hours ago
குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 35 வது ஆண்டாக, கிருத்திகை விழா இன்று நடந்தது. காலை 11:00 மணிக்கு, கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால், நெய், தயிர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் பாலித்தார். இதையடுத்து நல்லி செட்டிபாளையம், ஸ்ரீ செல்வ விநாயகர் குழுவின் பஜனை இரண்டரை மணி நேரம் நடந்தது. மதியம் 2,000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.