விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :4 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோடு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி காலை சிறப்பு அபிேஷகம், பந்தல் கால் நடுதல், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6ம் தேதி கோ பூஜை, வாராகி அம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்து கும்ப கலச நீர் ஊற்றப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு வீரவாழியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் வீதியுலா மற்றும் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கரம் ஜோடித்து அலகு குத்தி அம்மன் வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.