உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப் பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜையில், 108 பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.


ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், அம்பாளுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்நாளில் அம்பாளை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். இதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், நவராத்திரி கொலு மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு விளக்கு பூஜையில், சுமங்கலி பெண்கள் மற்றும் இளம் பெண்கள் என பலரும் பங்கேற்றனர். கோவில் மண்டபத்தில் வரிசையாக தீபங்கள் ஏற்றப்பட்டு, அம்பாளின் திருநாமங்கள், லலிதா சகஸ்ரநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதப்பட்டன. விளக்கு பூஜையின்போது, மங்கல நாண் நிலைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பெருகவும் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்த பூஜையில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !