உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி நிறைவு; புஷ்ப அலங்காரம் வாராகி அம்மன்

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி நிறைவு; புஷ்ப அலங்காரம் வாராகி அம்மன்

தஞ்சாவூர் ; தஞ்சை பெரியகோவில் ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆசாட நவராத்திரி நிறைவு நாளில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய  ஸ்ரீபெருவுடையார் கோவிலில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீ  வாராகி ம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் கடந்த 13ந் தேதி தொடங்கியது,10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 10வது நாளாக இன்று வாராகி அம்மனுக்கு பல்வேறு வகை மலர்களால் புஷ்ப அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, மேலும் நந்தி மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராகி அம்மனை வழிபட்டனர். இத்துடன் ஆஷாட நவராத்திரி விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !