நத்தமேடு பூரணி புஷ்கலா – அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2 days ago
நெட்டப்பாக்கம்: நத்தமேடு பூரணி புஷ்கலா – அய்யனாரப்பன் திருக்கல்யாணம் உற்சவம் நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த நத்தமேடு ஏரிப்பாக்கம் கிராமத்தில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், முத்துமாரி யம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று பூரணி புஷ்கலா – அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல், சீர்தட்டு வரிசை கொண்டு வருதல் நடந்தது. தொடர்ந்து சுவாமி கழுத்தில் வைக்கப்பட்ட மாலைகள், தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.