ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2 days ago
திருச்சி; ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பலர் பால்குடம், மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபட்டனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம் குடிநீர், தரிசன வரிசை, மருத்துவ உதவி உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்ய போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசம் நிறைந்திருந்தது.