உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீதியை நிலைநாட்ட மடப்புரம் வாங்க

நீதியை நிலைநாட்ட மடப்புரம் வாங்க

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசிப்போம்.  

முன்பு மதுரை வெள்ளத்தில் மூழ்கியது. அதன்பின் மதுரையின் எல்லையை காட்டுவதற்காக சிவன் தன் கழுத்தில் உள்ள பாம்பை அனுப்பி வைத்தார். அது கிழக்கில்
மடப்புரம், மேற்கில் திருவேடகம், தெற்கில் திருப்பரங்குன்றம், வடக்கில் அழகர்கோவில் என மதுரையின் நான்கு எல்லையை காட்டியது. அதன் பின் மதுரை மீனாட்சியம்மன் இத்தலத்தில் பத்ரகாளியாக எழுந்தருளினாள். காவல் தெய்வமான அய்யனார் தன் வாகனமான குதிரையை நிறுத்தி பத்திரகாளிக்கு நிழல் கொடுத்தார்.
இக்கோயிலில் அநீதியை தட்டிக் கேட்கும் விதத்தில் ஆவேசத்துடன் திரிசூலம் ஏந்தியபடி நிற்கிறாள் காளி. எலுமிச்சை மாலை சூடி நிற்கும் இவளுக்கு முன்புறம் பூதங்கள் உள்ளன.
 
காவல் தெய்வமான இவள் தீய சக்திகளை நொடியில் பொசுக்குவாள். அம்மன் அருளால் வேண்டுதல் நிறைவேறியதும் அவளுக்கு எலுமிச்சை மாலை, சேலை சாத்துகின்றனர். வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசையன்று விசேஷ பூஜை நடக்கிறது.

எப்படி செல்வது: மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 20 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04574 – 290 234


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !