கையில் வேலுடன் நகரத்தார் குன்றத்திற்கு பாதயாத்திரை
ADDED :1 hours ago
திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலம் எஸ்.சொக்கநாதபுரம் நகரத்தார் 300க்கும் மேற்பட்டோர் கையில் வேலுடன், காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் வந்தனர்.
திருப்பரங்குன்றத்திலுள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை, வேல் பூஜை செய்தனர். நேற்று காலை காவடி, பால்குடம், சர்க்கரை காவடி எடுத்து கிரிவலம் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.நகரத்தார் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை டிரஸ்ட் நிர்வாகிகள் வள்ளியப்பன் , நாகராஜன் கண்ணப்பன் கூறுகையில், ‘‘முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடி பரணி நட்சத்திர நாளில் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துவோம். அன்றைய தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்தாண்டு முன்னதாகவே வந்துவிட்டோம்’’ என்றனர்.