கோதண்ட ராமர் சுவாமி கோவில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள்
கோவை; ராம் நகர் திருப்பாவை திருவம்பாவை கமிட்டி சார்பில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள் என்ற நிகழ்ச்சி ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவில் வளாகத்தில் நடந்த து வருகிறது. இந்த நிகழ்வானது கடந்த 23-07 2026 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 02ம் தேதி நிறைவு பெறுகிறது இந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாண ராமன் அவர்கள் சொற்பொழவு நிகழ்த்தி வருகிறார் . முதல் நாள் அன்று ஸ்ரீ ராம அவதாரம் இரண்டாம் நாள் விசுவாமித்திரன் வேள்வி காத்தல் அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீ சீதா கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு வரம் திங்கட்கிழமை அன்று பாதுகா பட்டாபிஷேகம் தொடர்ந்து மாயமான் புதன்கிழமை அன்று வாலி மோட்சம் வியாழக்கிழமை அன்று அசோகவனத்தில் அன்னை வரும் வெள்ளிக்கிழமை அன்று கண்டேன் தேவியை சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி அன்று விபீஷணாரனாகதி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை 02.08.2026 அன்று ராம ராவண யுத்தம் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் என்ற தலைப்புடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று கோவில் நிர்வாகம் மற்றும் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.