உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பவுர்ணமி; முழுநிலவில் இறைவனை வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேறும்!

ஆடி பவுர்ணமி; முழுநிலவில் இறைவனை வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேறும்!

ஆடி பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து, காலையும் மதியமும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவிலில் உள்ள சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்த வேண்டும். தெய்வங்கள் குறித்த பாடல்களை மனமுருகி பாட வேண்டும். தெரியாதவர்கள் மற்றவர்களைப் பாடச் சொல்லி கேட்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடித்துக் கொள்ளலாம்.ஆடி பவுர்ணமி விரதம் அறிவை விருத்தி செய்யும்.மாணவர்கள் இதைக்கடைபிடித்தால் கல்வியில் சிறப்பர். அவர்கள் மூன்று வேளையும் எளிய உணவு சாப்பிடலாம்.


ஆடி பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள். முதல் குருவான வியாசரின் அவதார நாள். ஆடி மாதப் பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள். முதல் குருவான வியாசரின் அவதார நாள். எல்லா மடங்களிலும் வியாசரை வணங்கி, மடாதிபதியிலிருந்து யாவரையும் பூஜித்து வணங்குவர். சீடர்கள் தங்களது முந்தைய- தற்போதைய குருவை வணங்குவர். பத்ரிநாத்திற்கு மேலே வியாசர் குகை, விக்ரகம் உள்ளது. அதற்கு மேலுள்ள குகையில் வியாசர் இன்றும் வாசம் செய்வதாகச் சொல்வர். ஆதிசங்கரர், மாத்வாச்சார்யர் போன்றவர்கள் வியாசரை தரிசித்து ஞானம் வளர்த்தனர். மார்க் கண்டேயர்போல் ஆதிசங்கரரின் வாழ்வு 16 வயதுதானாம். 32-ஆக மாற்றியவர் வியாசர் என்பர். ஆக, இந்து தர்மத்தினர் அவசியம் வியாச அவதாரத்தை மதித்து வணங்கி குருவருள் பெறவேண்டும்.


குரு என்பது தத்துவம். உருவமாகவும் இருக்கலாம்; அருவமாவும் இருக்கலாம். ஸ்காந்த புராணம் சிவ -பார்வதி சம்பந்தமாக ‘குரு கீதை ’ என்று 300 துதிகளில் குரு மகிமையைக் கூறுகிறது. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த நாள் இந்த ஆடி பவுர்ணமி தான். இன்று வீட்டில் விளக்கேற்றி குல தெய்வம், இஷ்டதெய்வத்தை நினைத்து விரதம் இருக்க வேண்டும். இன்று மாலை பவுர்ணமி நிலவுடன் சிவ தரிசனம் செய்ய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !