திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :14 hours ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு இன்று பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஒரு மணி நேரம் காத்திருப்பு: பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் சமயங்களில் மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்களுக்கு ஒரு வரிசையும், கட்டணமில்லா தரிசன பக்தர்களுக்கு ஒரு வரிசையிலும் அனுப்பப்படுகின்றனர். கூட்டம் அதிகம் உள்ள காலங்களில் மூலஸ்தானத்தில் இலவச தரிசன பக்தர்கள் மூன்று வரிசையாக அனுப்பப்படுகின்றனர். இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வந்ததால், இலவசம் மற்றும் கட்டண தரிசன பக்தர்கள் தலா இரண்டு வரிசைகளில் அனுப்பப்பட்டனர். இலவச தரிசன பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.