உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்குடியில் தீமிதி திருவிழா

வெள்ளியங்குடியில் தீமிதி திருவிழா

சேத்தியாத்தோப்பு: வெள்ளியக்குடி கிராமத்தில் சந்தான மாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.

தீமிதி உற்சவம் கடந்த 24ம் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டி, கொடியேற்றத் துடன் துவங்கியது.

27ம் தேதி மாலை ஊரணி பொங்கலும், 28ம் தேதி இரவு அய்யனார், சந்தான மாரியம்மன் சாமி வீதியுலா நடந்தது. அக்னி சட்டி, பால்குடம் ஊர்வலம் நடந்தது.

கடந்த 31ம் தேதி மாலை அய்யனார் குளக்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீமிதித்து நேரத்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !