ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
ADDED :1 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஓதுவார் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சன்னியாசி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னதாக காலை 10 மணி அளவில் ராமநாதீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் ஓதுவார்கள் பங்கு பெற்ற தேவார, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.
இதில் ஓதுவார்கள் அருணாச்சலம்,ராமர், திலகம், சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.