புதுச்சேரி தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :9 hours ago
புதுச்சேரி: புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவம் கடந்த 27 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று முதல் வரும் 4ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திருத்தேர் உற்சவம் நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.