அவிநாசி முனியப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவில் ஆடி பொங்கல் விழா
அவிநாசி: அவிநாசி வாணியர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
அவிநாசி வாணியர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில் ஆடி பொங்கல் விழா கடந்த 3ம் தேதி கணபதி ஹோமம், உலக மக்கள் நலம் பெற நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத தேர்வீதியை சுற்றி ஊருக்கு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர்,ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் ஆடிப்பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.