கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் உற்சவம் துவக்கம்
ADDED :9 hours ago
கடலுார்: கடலுார் பிரசித்தி பெற்ற நாகம்மன் கோவில் செடல் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகம்மன் கோவில் செடல் உற்சவம் 10 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து, தீபாராதனை, கொடியேற்றம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் காலை தீபாராதனை, இரவு கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, அம்மன் வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் விழாவாக வரும் 14ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. 15ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.