பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :13 hours ago
சூலூர்: பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.
சூலூர் அடுத்த பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், 17 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமினி சாரதேஸ்வரி பிரியம்பா தலைமை வகித்தார். 108 திருவிளக்கு களுக்கு, 108 பெண்கள், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருவிளக்கு பூஜையின் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. சுவாமினி சிவஞான பிரியம்பா, சுவாமி ஆத்மராமானந்த மகராஜ், மூர்த்தி தம்பிரான் சுவாமிகள், விஸ்வ லிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் அருளாசி வழங்கினர். காடாம்பாடி ஸ்ரீ சாந்த சிவகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி லட்சார்ச்சனை பூஜை நடந்தது. காலை கணபதி ஹோமம் முடிந்து, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் லட்சார்ச்சனை நடந்தது. மாலை மகா தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.