தொண்டி காமாட்சி அம்மன் கோயில் திருவிழா
ADDED :2 days ago
தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே காமாட்சி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை காவடி எடுத்தலும், இரவில் பூத்தட்டு ஊர்வலமும் நடந்தது. ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.