ஆடி அமாவாசை; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஆடி அமாவாசை தினத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரக் கூடும் என்பதால், பேரிக்காடுகள் அமைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவ பாஷான நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு, ஆடி, தை அமாவாசை தினங்களில், கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், நாளை ஆக.12 ல் ஆடி அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, நவபாஷாண கோயில் முகப்பு பகுதியில் இருந்து, கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்கள் வரை பேரிக்காடுகள் அனைத்து பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் பக்தர்களுக்கான மருத்துவ வசதி பாதுகாப்பு வசதிகள் இது இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் லட்சுமி மாலா, செயல் அலுவலர் மாரிமுத்து, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.