உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி; திருப்பதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோவிலில் நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தூபம் மற்றும் தீபங்கள் ஏற்றி மகா ஆரத்தி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர். 




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !