உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்; தர்ப்பணம் செய்து வழிபாடு

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்; தர்ப்பணம் செய்து வழிபாடு

தேவிபட்டினம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.


தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நவபாஷாண கடற்கரையில் கூடினர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நவபாஷாணத்தில் பேரிகாடுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கடலுக்குள் புனித நீராடிய பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். பின்னர் நவபாஷாண கோயில் எதிரே உள்ள விநாயகர் மற்றும் கடலடைத்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆய்வாளர் லட்சுமி மாலா, செயல் அலுவலர் மாரிமுத்து, எழுத்தர் தங்கவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !