உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் ஆடி அமாவாசை விழா

ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் ஆடி அமாவாசை விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை விழா நடந்தது.


மாவூற்று வேலப்பர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட 21 வகை அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !