திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நடராஜர் சன்னதி முன் மண்டபத்தில்நேரு காலை 9:00 மணிக்கு உற்சவ நாயன்மார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்மந்தர் நால்வரும் எழுந்தருளினர். தொடர்ந்து யாகசாலையில் 72 கலசங்கள் நிறுவி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகளை சிவாச்சார்யர்கள் நடத்தினர். பின்னர் பூர்ணாகுதிக்கு பின்னர் மூலவர் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்ஸவ நால்வர், மூலவர் நால்வருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்பட்டு அணிந்து நால்வர் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உட்பிரகாரத்திலும், கொடிமரத்தையும் நால்வர் வலம் வந்தனர். ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள், ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லூரி செயலர் நா.ராமேஸ்வரன் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.