திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு
ADDED :1 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு, இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. ஆவணி மாதத்தின் முதல் நாளான இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் சஷ்டியும் வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அகல் விளக்கேற்றியும், முருகனுக்குறிய மந்திரங்கள் சொல்லியும் பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் நெல்லிக்குப்பம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.