வரலட்சுமி விரத பூஜை : அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
போடி; வரலட்சுமி விரத வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 51 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் பத்மாவதி தாயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந் தார். அன்னதானம் வழங்கப்பட்டன.
* போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
* போடி தாய்ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.