பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :9 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் முன்னிட்டு பெருமாளுக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நேற்று நடந்தது. பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 16ம் ஆண்டு பவித்ரோத்சவம் கடந்த 23 ம்தேதி மாலை துவங்கியது. புற்றுமண் எடுத்தல், முதற்கால ேஹாமம், பூர்ணாகுதி நடந்தது. மறுநாள் 24ம் தேதி காலை நித்ய பூஜை, பவித்ர ஜபம், பவித்ரம் சாற்றுதல், 2ம் கால ேஹாமம், மாலை 3ம் கால ேஹாமம், பூர்ணாகுதி நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை அக்னி ஆராதனை, உற்சவர் திருமஞ்சனம், 4ம்கால ேஹாமம், பூர்ணாகுதி,மாலை ஸ்ரீபெருந்தேவி தாயார் ஸ்ரீவரதராஜபெருமாள் சேஷவாகனத்தில் 1008 தாமரை பூக்களால் சகஸ்ரநாம அர்ச் சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.