பரமக்குடி பூமாரி அம்மன் கோவிலில் காப்பு கட்டு
ADDED :12 hours ago
பரமக்குடி: பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமம் பூமாரி அம்மன் கோயில் 17வது ஆண்டு பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று இரவு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டப்பட்ட நிலையில் நேர்த்தி கடன் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் ஒவ்வொரு நாளும் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு நடத்துவர்.