உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சிறுபாக்கம் வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை

அச்சிறுபாக்கம் வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் கிழக்கு மாடவீதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது.


அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் கிழக்கு மாடவீதியில் வினை தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணியை மேற்கொள்ள கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று பந்தக்கால் நடப்பட்டு, சிவாச்சாரியார்கள் முறைப்படி முதல் கால பூஜையாக விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக விழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து இரண்டாம் காலம், மூன்றாம் கால பூஜைகள் முறையாக நடந்து, இன்று பூர்ணாஹீதி, யாத்ராதானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின் காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீருடன், சிவாச்சாரியார்கள் கோவில் உட்பிரகாரம் வளம் வந்தனர். காலை 10:15 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். பின், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள மூலவரான வினை தீர்த்த விநாயகருக்கு புனித நீர் ஊற்றி, மஹா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !