உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு விழா

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு விழா

புதுச்சேரி: புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள, முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக இரண்டாம் ஆண்டு முத்து பல்லக்கு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி பூஜை, சுத்தி புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், ரக்ஷாப பந்தனம், முதல் கால அதிவாச அஷ்டோத்தர சத கலச பூஜைகள், விசேஷ மந்திர பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை இரண்டாம் கால யாகம், கோ பூஜை, அஷ்டோத்தரசத கலச பூஜைகள், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஹோமம், பூர்ணாஹீதி, அவபிரத 108 கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், முத்து பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை உபயதாரர் ரவிச்சந்தர் மற்றும் அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !