உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

திருப்புல்லாணி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.


நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூலவர் அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபாவனைகள் நடந்தது. இன்று பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் கரகம் முன்னே செல்ல பாரி சுமந்து பெண்கள் சென்றனர். ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் மற்றும் முத்தரையர் சங்கத்தினர் செய்தனர். 


* திருப்புல்லாணி அருகே நம்பியான் வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த ஆக., 23 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று மாலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். பாரி கங்கை சேர்க்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நம்பியான் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்


* சின்னாண்டி வலசையில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. நேற்று இரவு நேர்த்திக்கடன் பக்தர்களின் அக்னி சட்டி, காவடி உள்ளிட்டவைகள் நடந்தது. கோயில் முன்பு கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகளுக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சின்னாண்டி வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


* காடுகாவல்காரன் வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. பெரியபட்டினம் அருகே சவட்டையன்வலசையில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் பூவிறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !