பரமக்குடி பூமாரி அம்மன் கோயில் பொங்கல் விழா நிறைவு
ADDED :11 hours ago
பரமக்குடி: பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் பூமாரி அம்மன் கோயில் பொங்கல் விழா நிறைவடைந்தது. கோயிலில் 17வது ஆண்டு பொங்கல் விழாவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் இருந்தனர். தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிளக்கு வழிபாடு, பொங்கல் வைபவம், பால்குடம், அலகு குத்துதல் என நேர்த்திகடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.