தங்க முலாம் பூசிய வெள்ளிக் கிரீடம் காணிக்கை
ADDED :7 hours ago
விருதுநகர்: விருதுநகரில் ஹிந்து நாடார் தேவஸ் தானத்திற்கு சொந்தமான வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கார்த்திகையை முன்னிட்டு ஒரு கிலோ எடையுள்ள ரூ.7 லட் சத்திலான தங்க முலாம் பூசிய வெள்ளிக் கிரீடம் முருகருக்கு சாற்றப்பட்டது.
இதை முன்னாள் தேவஸ்தான நிர்வாகியும், தொழிலதிபருமான தங்கராஜன் குடும்பத் தினர் வழங்கினர். கிரீடம் அணிந்து வாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.