உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா

திண்டிவனம் பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா

திண்டிவனம்: பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடந்த உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஜென்மாஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 8:30 மணிக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு தோறும் வெண்ணெய் எடுக்க புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் கோவில் முன்பு உறியடி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் யாதவ மகா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !