‘அம்மன் புகழ் மாலை’ பக்தி நுால் வெளியீடு
ADDED :3 hours ago
திருப்பூர்: அலகுமலை கவிஞர் குருசாமி எழுதிய, ‘சவுபாக்கியம் அளிக்கும் சவுண்டம்மன் புகழ்மாலை’ என்ற பக்தி நுால் வெளியிடப்பட்டது.
அமராவதிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், அம்மன் மீதான புகழ்மாலை நுால் வெளியிடப்பட்டது.
அலகுமலை திருப்பணி செம்மலின் வரலாற்று நுாலுக்காக அமெரிக்க உலக தமிழ் பல்கலையின் சிறந்த நுால் விருதை பெற்ற குருசாமி, இதுவரை பாண்டீஸ்வரன் பாமாலை, கற்கண்டு பனிரெண்டு, தங்கமேட்டு கீதங்கள் உள்ளிட்ட 12 நுால்களை எழுதியுள்ளார்.