உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி துவக்கம்

பழநி முருகன் கோயிலில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயிலில் உட்பிரகார மகா மண்டபத்தில் உள்ள சிவன் சன்னதியில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி துவங்கியது.


பழநி முருகன் கோயிலில் உட்பிரகார மகா மண்டபத்தில் நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிகளுக்கு சட்டசபையில் அறிவித்தபடி வெள்ளி தகடுகள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி உபயதாரர்கள் மூலம் 89 கிலோ எடையில் வெள்ளித் தகடுகள் செய்ய ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனுமதி வழங்கியது. அதன்படி நகாஸ் வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளி தகடுகள் 88 ஆயிரத்து 975 கிராம் எடையுள்ள வெள்ளி தகடுகள் செய்ய தயார் செய்யப்பட்டது. இன்று காலை கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் கோயில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் வெங்கடேஷ், திண்டுக்கல் ஹிந்து சமய அறநிலைத்துறை சரிபார்ப்பு அலுவலர் அன்னக்கொடி, கோயில் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளி தகடு பொருத்தும் பணிகள் துவங்கின. வெள்ளி தகடுகளை பதிக்க பணியாளர்கள் ஐந்து நாட்கள் ஈடுபடுவார்கள். வெள்ளி தகடுகளை கரூரைச் சேர்ந்த பத்ரிநயணன், ஹேமலதா, ஹேமந்த், திவ்யா, விக்னேஷ், வைஷ்ணவி, விஷ்ணுபிரசாத், சங்கீதா, அஸ்வின்குமார், நிகிதா, பிரதீப் குமார் ஆகியோர் உபயமாக வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !