உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெருவயல் வள்ளி, தெய்வானை சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் ஓராண்டாக திருப்பணிகள் செய்யப்பட்டது.

தமிழகத்தில் இங்கு மட்டுமே சத்குரு சம்ஹார வேலில் முருகன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் கும்பாபிேஷக விழா செப்.,1ல் கணபதி ஹோம பூஜையுடன் துவங்கி தினமும் ஆறுகால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் 6:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித கும்பநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சுவாமி, வேலுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

சமஸ்தான நிர்வாகிகள், அதிகாரிகள், அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

*ராமநாதபுரம் வெளிபட்டணம் ஆயிர வைசிய காசுக்கடை வியாபாரிகள் திருமண மகால் அருகே கற்பக சுந்தரவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.

சுவாமி, பரிவார தெய்வங்களான நாகநாதர், சந்தான கோபால கிருஷ்ணர், அகஸ்தியர், சித்தர் பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான்கோட்டை மடத்து ஊரணி கீழ்கரை நொண்டி சோனை கருப்பர், பூ மாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததுது.

பின்னர், சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !