குதிரை வாகனத்தில் எழுந்தருளி இலங்கை நல்லூர் முருகப்பெருமான் அருள்பாலிப்பு
ADDED :1 days ago
இலங்கை, நல்லூர் பெருங்கோயிலின் இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. விழாவில் இலங்கை பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக இலவச போக்குவரத்துச் சேவை ஏற்பாட்டிருந்தது.