உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அமாவாசை; ராமேஷ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள்

ஆவணி அமாவாசை; ராமேஷ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள்

ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். இன்று ஆவணி அமாவாசை யொட்டி தமிழகத்தின் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து விட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். இதனைதொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !