உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி ; கல்யாண விநாயகர் கோயிலில் 108 சங்காஷேகம்

விநாயகர் சதுர்த்தி ; கல்யாண விநாயகர் கோயிலில் 108 சங்காஷேகம்

மதுரை; திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கியது. இன்று காலை மூலவர் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், மூல மந்திரஹோமம், தீபாராதனை நடந்தது. பின்பு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. சங்குகளில் இருந்த புனித நீர் மூலவர்கள் சித்தி, புத்தி, கல்யாண விநாயகர், உற்ஸவர் விநாயகருக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.‌ திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !