சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா
ADDED : 145 days ago
கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றினார் இளையராஜா. இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்பொனியை எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்தார். தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் அவர் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை, அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் இணைந்து அரங்கேற்றினார்.
மேலும் இதை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும். குறிப்பாக சிம்பொனி அனுபவத்தை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசையை இளையராஜா தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் வரும் மே 30ம் தேதி சிம்பொனி இசை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிம்பனி இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார்.