உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிபா இறுதிப்போட்டி : பார்த்து ரசித்த மோகன்லால், நெல்சன், விக்னேஷ் சிவன்

பிபா இறுதிப்போட்டி : பார்த்து ரசித்த மோகன்லால், நெல்சன், விக்னேஷ் சிவன்

உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து போட்டிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். அதிலும் உலகக் கோப்பைப் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தியாவில் ஒரு பக்கம் கிரிக்கெட் போட்டியின் ரசிகர்கள் இருந்தாலும் கால்பந்து, டென்னிஸ் ஆகியவற்றின் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

நேற்று நடந்த பிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜன்டினாவை ஒரு கோல் அடித்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அமெரிக்காவில் நடந்து வந்த போட்டிகள் நேற்றுடன் நிறைவுற்றன.

நேற்றைய ஸ்பெயின், அர்ஜன்டினா அணிகளுக்கு இடையிலான போட்டியை மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் இயக்குனர்கள் நெல்சன், விக்னேஷ் சிவன் ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர். மைதானத்திலிருந்து சில புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !