உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை 60028 மூன்றாம் பாகத்திற்கு தயாராகும் வெங்கட் பிரபு

சென்னை 60028 மூன்றாம் பாகத்திற்கு தயாராகும் வெங்கட் பிரபு

கடந்த 2007ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்குனர் ஆக அறிமுகமான படம் 'சென்னை 60028' . சிவா, ஜெய், நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த், இளங்கோ ரவி என பலர் இளைஞர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு முன்னனி இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

அதேபோல் மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு வெங்கட் பிரபுவிற்கு எந்தவொரு முன்னணி நடிகர்களும் கால்ஷீட் தரவில்லை. இதனால் வெங்கட் பிரபு கடந்த 2016ம் ஆண்டில் சென்னை 60028 இரண்டாம் பாகத்தை உருவாக்கி வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் தமிழில் இரண்டாம் பாகத்தை எடுத்து வெற்றி பெற்றவர் வெங்கட் பிரபு மட்டும் தான் என்பார்கள்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு 'தி கோட்' படத்திற்கு பிறகு அடுத்த படம் அமையாமல் உள்ளது. இதனால் சென்னை 60028 மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பணியை வெங்கட் பிரபு கையில் எடுத்துள்ளார். இதற்கான கதை விவாத பணிகளை ஏற்கனவே மலேசியாவிற்கு சென்று தனது குழுவுடன் வெங்கட் பிரபு எழுதி முடித்துள்ளார். விரைவில் சென்னை 60028 மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !