வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் 83 வயது மூத்த நடிகரான அமிதாப் பச்சன், தனது சமீபத்திய பிளாக் பதிவு காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஐசியு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அமிதாப் பச்சன் தனது பதிவில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, திறமையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில், டிஸ்சார்ஜ் மற்றும் வீடு திரும்புதல் என்று பதிவு போட்டிருந்தார். மேலும், இந்த வீடு திரும்பும் காலம் மிகவும் கடினமான கட்டமாகும். உடலளவிலும், மனதளவிலும், நடைமுறையிலும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த பதிவை ரசிகர்கள் பலர் அவரது சொந்த உடல்நலம் குறித்த தகவல் என நினைத்துக் கொண்டதால், பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில், நான் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை. சமீபத்தில் முடிவடைந்த பிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயினிடம் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டே அவ்வாறு பதிவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.